• Apr 30 2024

4நாட்கள் முடிவில் சாகுந்தலம் படம் செய்த வசூல் இவ்வளவு தானா.. இது சீரியலா..? திரைப்படமா..? கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம். இப்படமானது 80 கோடிகள் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். 

அத்தோடு தில் ராஜூ தயாரித்துள்ளார். இவ்வாறாக 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவான சாகுந்தலம் படம் பான் இந்தியா திரைப்படமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அதிதி பாலன், சச்சின் கெதெக்கர், கௌதமி, மோகன்பாபு,பிரகாஷ்ராஜ்,  மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளில் ரூ.4 கோடி வசூல் மட்டும் தான் கிடைத்தது. இதையடுத்து நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் குறைவடைந்தது. அந்தவகையில் நேற்றைய தினம் இப்படம் வெறும் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்ததாம். இதனால் சாகுந்தலம் திரைப்படம் சமந்தாவின் கெரியரில் படு தோல்விப் படமாக அமையும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.


இந்நிலையில் இப்படம் வெளியாகி தற்போது 4நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9.06 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் படம், சீரியல் போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement