• May 04 2024

சின்ன வயசில நம்ம விஜய்க்கு இப்படி ஒரு ஆசை இருந்திருக்குங்க... நடிக்கிற எண்ணமே சுத்தமாக இல்லையாம்.. அப்போ என்னவாக இருக்கும்..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய திறமையினாலும், விடாமுயற்சியாலும் இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.


தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இதுவரைக்கும் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தப் படமானது பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் அப்படத்துடன் இணைந்து அஜித்தின் 61 ஆவது திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எது வெற்றிப் படமாக மாறும் என்ற எதிர்பார்ப்புடன் தல, மற்றும் தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.


அதுமட்டுமல்லாது இதனைத் தொடர்ந்து விஜய் தனது 67 ஆவது படமான 'தளபதி 67' இலும் இணைய இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக சமீபகாலமாகவே தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன.

இந்நிலையில் தளபதி விஜய் குறித்து அவரின் அம்மா ஷோபா பகிர்ந்து கொண்டுள்ள ஒரு விடயமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது அதில் அவர் விஜய்க்கு சிறுவயதில் இருந்த ஆசை குறித்து பேசியுள்ளார்.


அதன்படி விஜய்க்கு 7 ஆவது படிக்கும் போதிருந்தே பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கின்றது. இது தொடர்பாக அவரின் அம்மாவிடம் கூறி இருக்கின்றார். ஆனால் சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் விஜய்யின் ஆசையை கண்டு தயங்கினார்களாம்.

எனினும் சிறிது காலத்திற்குப் பின்னர் விஜய்யின் ஆசை மாறி இருக்கின்றது. அதாவது விஜய்யின் கல்லூரி காலத்தில் அவருக்கு நடிப்பதில் ஆசை இருக்கின்றது என தெரிவித்தாக விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்துள்ளார்.   


விஜய்யின் அம்மா கூறிய இந்த விடயமானது காலம் கடந்திருப்பினும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement