• May 18 2024

தமிழ் தெரியாததால ரூமுக்குள்ள போய் பீல் பண்ணியிருக்கேன்; ஓடிப் போலாமா என்டு இருந்திச்சு- ரோஜா சீரியல் சிப்பு ஓபின் டோக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சிப்பு சூரியன். இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே வெள்ளித்துறையில் கவனம் செலுத்த போவதாக ரோஜா சீரியல் இருந்து விலகிய இவர் மீண்டும் அந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். இதுபோல் இரண்டு முறை விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் அதே சீரியலில் நடித்தார்.தற்போது சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய நிலையில் ரோஜா சீரியல் பற்றி கழுவி ஊற்றியுள்ளார்.


அதாவது ரோஜா சீரியலில் நடிக்கும் போது சீக்கிரம் முடிஞ்சிடுச்சு என்றால் இதை விட்டுட்டு இன்னொரு வேலை பார்க்கப் போய்டலாம். இரண்டு அல்லது மூன்று வருஷம் நடிக்கலாம். ஆனால் அதே மாதிரி சீன் அதே மாதிரி சண்டை என்று ஐந்து வருஷம் எப்படி நடிக்க முடியும்.எப்படா முடியும் கடவுளே ஓடிப் போவமா என்று கூட இருந்திச்சு. 

இரண்டு தடவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே போட்டுட்டேன் ரோஜா சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று. ஆனால் இடையில் விட்டுட்டு போனால் மக்களிடையே நெக்கட்டிவ் எண்ணம் வந்திடக் கூடாது என்பதற்காகத் தான் ரோஜா சீரியலை முடிச்சுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.


மேலும் சீரியல் முடிஞ்வுடன் படத்தில நடிக்கணும் என்று தான் இருந்தேன். ஆனால் பிரவீன் சேரோட பேச்சைக் கேட்டு இம்பிரெட்ஸ் ஆகிட்டேன். ப்ரோமோ ஷுட்டிங் நடத்தும் போதே அவர் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். அதனால் தான் இந்த சீரியலில் நடிக்கலாம் என்று நம்பி நடித்து வருகின்றேன்.

மேலும் தொடர்ந்து பேசிய இவர் ஆரம்பத்தில் எனக்கு தமிழ் தெரியாது. அப்போ ரூமுக்குள்ள போய் பீல் பண்ணி இருந்திருக்கிறேன். ஆனால் இப்போ தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். கஷ்டமான வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் சொல்லக் கடினமாக இருக்கும் ஆனால் சமாளிிச்சுப் பேசிடுவேன் என்றும் அந்த இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement