• Sep 22 2023

தொடர்மழை காரணமாக இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்த ஏஆர் ரஹ்மான்!- சோகத்தில் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான். ரோஜா படத்தில் புது வெள்ளை மழையாக பொழிந்த இந்த இசைப்புயல் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழில் அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். 


அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் ஏஆர் ரஹ்மான் சர்வதேச அளவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்தவகையில் நீண்ட காலங்களுக்கு பிறகு இன்றைய தினம் சென்னையில் இவரது இசை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. பனையூரில் திறந்தவெளி மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏஆர் ரஹ்மான் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மழை காரணமாக ரசிகர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தின் தற்போதைய நிலையையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்க்ததில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களில் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. 

இசைப்புயலின் இசைக் கச்சேரிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். 8 ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அதிகமான ஆர்வத்துடன் டிக்கெட்டுகளையும் புக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement