• May 05 2024

பொன்னி நதி பாடலுக்கு பள்ளி மாணவர்கள் செய்த செயல்... ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ரியாக்சன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படமே 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில் நடித்த பிரபலங்களை எந்தளவிற்கு பாராட்டிக் கொண்டாடினார்களோ அந்தளவிற்கு ஏஆர் ரஹ்மானின் இசையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


கடந்த 30 ஆண்டுகளாக மணிரத்னமுடன் இணைந்து தரமான பாடல்களை கொடுத்து வரும் ஏஆர் ரஹ்மான், பொன்னியின் செல்வனுக்கும் பாடல்கள், பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வெரைட்டி வெரைட்டியாக உருவாகியுள்ளன. 

அதேபோன்று பின்னணி இசையிலும் வேறலெவலில் மொமண்ட் கொடுத்திருந்தார் ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரகுமான். இதில் "பொன்னி நதி, சோழா சோழா, தேவராளான் ஆட்டம், ராட்சச மாமனே" என அனைத்து பாடல்களும் மற்றும் வரிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

அத்தோடு இப்படத்திற்ககாக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை என சில சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பொன்னி நதி..' பாடலை பள்ளி மாணவர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். அதாவது முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களுக்காக மட்டும் பொன்னியின் செல்வன் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.

அப்போது அந்த அரங்கு முழுவதும் நிரம்பியிருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் பொன்னி நதி பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் ரொம்பவே உற்சாகமாகி குதூகலிக்கத் தொடங்கினர். 


அதுமட்டுமல்லாது அந்தப் பாடலை கோராஸாக பாடியும் ரொம்பவே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இவ்வாறாக பொன்னி நதி பாடலை பள்ளி மாணவர்கள் கொண்டாடிய இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் அந்தப் பதிவுகளில் ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி கூறியும் பலர் பதிவிடப்பட்டிருந்தனர். அதற்கு க்யூட்டாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ள நம்ம ஏஆர் ரஹ்மான் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement