• May 07 2024

டான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் திகதி அறிவிப்பு- செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, ஷிவாங்கி, சூரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனால் படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருப்பதால், படத்திற்கான ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ட்ரெய்லர் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், டான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் திகதி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement