பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி அரசிக்கு டீ கொடுக்காமல் வீட்டை மொப் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த அரசி காந்திமதி கிட்ட என்ன பொண்ணை வளர்த்து வைச்சிருக்கீங்க என்று கேட்கிறார். அதுக்கு காந்திமதி நான் வளர்த்த வரைக்கும் அவள் ஒழுங்காத் தான் இருந்தால் இப்ப தான் இப்படி மாறிட்டால் என்கிறார். அந்த நேரம் பார்த்து பாண்டியன் கடையில போய் டீ வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறார்.
பின் அந்த டீயை பாண்டியன் அரசிக்கும், காந்திமதிக்கும் கொடுத்து தானும் குடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஊருக்குள்ள சாப்பாட்டுக்கு 100 கடை திறந்து வைச்சிருக்காங்க எனக்கு பசிக்கிறப்ப நான் அங்க போய் வாங்கி சாப்பிடுவேன் என்று சொல்லுறார். மேலும், எனக்காக யாரும் இனிமேல் சமைக்க வேணாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி கோபப்படுறார்.

அதனை அடுத்து கதிர் கோமதியைப் பார்த்து உன்னோட அருமையான சாப்பாட்டை விட்டிட்டு போகணும் என்று அவரோட தலையில எழுதி இருந்தால் அதுக்கு யார் என்ன பண்ணமுடியும் என்று கேட்கிறார். மேலும், அவர் வேணாம் என்று சொன்னால் என்ன அவரோட சாப்பாட்டையும் வாங்கி நான் சாப்பிடுறேன் என்கிறார். அதைக் கேட்ட கோமதி எதுவுமே கதைக்காமல் அழுது கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் பாண்டியன் கடையில போய் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பழனியும் அங்க வந்து நிற்கிறார். பின் சரவணன் பழனியைப் பார்த்தவுடனே கடையை கொஞ்ச நேரம் பாருங்க நான் கோவிலுக்குப் போய்ட்டு வாறன் என்று சொல்லிட்டு கிளம்புறார். அதைத் தொடர்ந்து சரவணன் கோவிலில வீட்டில நடந்த பிரச்சனையை எல்லாம் அஞ்சலி கிட்ட சொல்லுறார். இவர்கள் இப்படி கதைச்சுக் கொண்டிருக்கிறதை மயிலோட அப்பா பார்த்திட்டு போனில வீடியோ எடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!