• Dec 08 2023

50வது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய அனிதா விஜயகுமார்! சரக்கு பாட்டில்களுடன் ஜொலிக்கும் தோழிகள்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமார் தனது 50வது பிறந்த நாளை தன் தோழிகளுடன்  வெளிநாட்டில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தமிழ்த் திரையுலகில் தலைசிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். தற்போது சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறமையை காட்டியுள்ளார்.

இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். அதில் மூத்த மனைவிக்கு அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதேபோல் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கும் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அனிதாவை தவிர மற்ற அனைவருமே சினிமாவில் நடித்துள்ளனர். 


விஜயகுமார் வீட்டில் சினிமாவை ஒதுக்கி டாக்டருக்கு படித்தவர் தான் அனிதா.தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தோஹாவில் செட்டில் ஆன அனிதாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

இந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். இது அவரது 50-வது பிறந்தநாள் என்பதால் சற்று ஸ்பெஷலாக கொண்டாடி உள்ளனர். அதன்படி, தன்னுடைய 50-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பார்ட்டி வைத்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார் அனிதா.  




Advertisement

Advertisement

Advertisement