• Jun 17 2026

3 வருடம் உழைத்த சூர்யாவின் கங்குவா பிளாப்..? கருப்பு வெற்றியில் உளறிய RJ பாலாஜி.!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கருப்பு திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் முந்தைய படங்களான கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகியவை தொடர் தோல்விகளை சந்தித்திருந்த நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றிக் கம்பேக் படமாக மாறியுள்ளது.

சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே கங்குவா படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது. படத்திற்கு பெரிய அளவில் பிரமோஷன் பணிகளும் நடைபெற்றன. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கங்குவா படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வரலாற்று கதைக் களத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதன் பின்னர் வெளியான ரெட்ரோ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


இந்த நிலையில், கருப்பு படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அளித்த பேட்டியில் கங்குவா குறித்து பேசினார்.

அதில் அவர் கூறியதாவது, கங்குவா படத்திற்காக சூர்யா மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு பத்து நாட்களிலேயே அவர் எங்கள் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அவரது எனர்ஜி அப்படியே இருந்தது.

கருப்பு படத்திற்காக நாங்கள் 51 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம். குறைந்த நாட்களில் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அது தற்போது நிறைவேறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement