சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி ரோகிணியைக் கூப்பிட்டு தன்னோட பிரெண்டுக்கு கலியாணம் இருக்கு நீங்க பிரீயா இருந்தா செய்யுறீங்களா என்று கேக்கிறார். அதைக் கேட்ட விஜயா உன்னோட பிரெண்டு கலியாணத்துக்கு அவள் எதுக்கு வரோணும் என்று கேக்கிறார். அதுக்கு ஸ்ருதி கலியாணத்தில சாத்துக்குடி கொடுக்கிறதுக்கு ஆட்கள் இல்ல அதுதான் கேட்டனான் என்று நக்கலாச் சொல்லுறார். அதைக் கேட்ட ரவி ஸ்ருதியைப் பாத்து நீ முதல்ல விஷயத்தைச் சொல்லு என்கிறார்.
இதனை அடுத்து ஸ்ருதி ரோகிணியப் பாத்து நீங்க மேக்கப் பண்ணுவீங்களா என்று கேக்கிறார். மேலும் நீங்க கேக்கிற பணத்தை எல்லாம் கரெக்டா கொடுத்திருவாங்க அதுக்கு நான் காரெண்டி என்று சொல்லுறார். அதுக்கு ரோகிணி ஆன்டி பேர்மிசன் கொடுத்தா நான் போறேன் என்கிறார். விஜயா நான் என்னோட பையனின்ர கடைக்குத் தான் போக வேணாம் என்று சொன்னேன் என்கிறார்.
மேலும் அண்ணாமலையைப் பாத்து இந்த வீட்டில நடந்ததெல்லாம் மறந்து போய்ட்டா என்று கேக்கிறார். இதனை அடுத்து முத்து மனோஜைப் பாத்து இவன் தான் ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கோணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி எங்கட விஷயத்தில நீங்க தலையிட வேணாம் என்று சொல்லுறார்.
மனோஜும் முத்துவைப் பாத்து எப்ப பாரு உனக்கும் மீனாவுக்கு நானும் ரோகிணியும் என்ன பண்ணுறோம் என்று பாக்கிறது தான் வேலை என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜயா மனோஜைப் பாத்து நீ ரோகிணிய கடைக்கு கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!