• May 07 2024

அவன் தான் உன்னை use பண்ணி இருக்கான்... ஜனனியை விக்ரமனுடன் கோர்த்து விடப் பார்க்கும் அமுது..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6ஆனது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற அதே நிலையில் அங்கு அமுதவாணன், ஜனனி ஆகியோரின் செயற்பாடுகளும் பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஜனனி அமுதவாணனின் பகடைக்காயாக இருக்கிறார், அமுதவாணனும் டாமினேட் செய்கிறார் என்கிற வாதத்தை பற்றி கமல் கூட வார இறுதி எபிசோட்டில் கேட்டிருந்தார்.


அதாவது கமல்ஹாசன் தனலட்சுமியின் மோசடித்தனத்தை குறிப்பிட்டு சுட்டிகாட்டியபோது அமுதவாணன் உள்ளிட்ட மற்றவர்களையும் வன்மையாகக் கண்டித்தார். அதாவது மோசடிக்கு துணையாக இருப்பதும் குற்றமே என்று தெரிவித்தார். கமல் இவ்வாறு கூறியதும் அமுதவாணன் கடும் அப்செட்டானார். 

அதுமட்டுமல்லாது இருவருடைய நெருக்கம் பற்றி ஹவுஸ்மேட்ஸ்கள் அங்கங்கே பல விமர்சனங்களை வைத்தாலும், கமல்ஹாசன் கண்டித்தாலும் ஜனனி, அமுதவாணன் இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.


இந்நிலையில் தற்போது ஜனனிக்கு அமுதவாணன் அட்வைஸ் கூறும் வகையில் அமைந்த ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் அமுதவாணன் "நீ இதில வந்து நீ மாட்டிக்க வேணாம், நாளைக்கு உனக்கு தான் கெட்ட பெயர் வரும், நான் போய்ட்டே இருப்பேன், நீ நல்ல பொண்ணு, என்னால யாருக்கும் பிரச்சனை வர கூடாது.

என்னையும் உன்னையும் பற்றி இப்படி தப்பாக சொல்லுற ஆளே விக்ரம் தான், கரெக்ட்டா பேசுற மாதிரி பேசி அவர் கோர்த்துத் தான் விட்டிருக்கார். என் மேல இருக்கிற வெறுப்பை உன் மூலமாக என் கிட்ட காட்டப் பாக்கிறார், அந்த இடத்தில் அவர் தான் உன்னை பகடைக்காயாய் use பண்ணி இருக்கார்" எனக் கூறியிருக்கின்றார்.


இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்களை பலரும் ஜனனியை விக்ரமனுடன் கோர்த்து விடுவதற்கு அமுதவாணன் பார்ப்பதாகக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement