• Apr 27 2024

மீண்டும் அதே இடத்திற்கு சென்ற ஏகே 61 டீம்...இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 ஹெச்.வினோத் மூன்றாவது முறையாக இணைந்து  அஜித் நடித்துவரும் படம் தான் ஏகே 61. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இமையமைக்கிறார்.

மேலும்  இந்த படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட புலு முக்கிய நட்ச்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஐதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடந்தது. இதன் பிறகு புனேயில் ஷுட்டிங் நடக்கிறது என சொல்லப்பட்ட நிலையில் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது. வலிமை படத்தில் க்ளீன் சேவ் ஆக நடித்த அஜித், ஏகே61 படத்தில் நீண்ட தாடியுடன் நடித்து வருகின்றார்.

அத்தோடு ஒரு மாத இடைவேளைக்கு பின்னர் துவங்கிய ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக அஜித், விசாகப்பட்டினம் சென்ற போட்டோக்கள், ஏர்போர்ட் பஸ்சில் மிக எளிமையாக பயணிகளுடன் பயணம் செய்த காணாளிகள் உள்ளிட்டவைகள் வைரலாகின.


விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு வார ஷுட்டிங் முடிவடைந்ததும், அடுத்த கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அத்தோடு ஐதராபாத்தில் நடக்க உள்ள ஷுட்டிங்கில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கும் சீன்கள் தான் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சமுத்திரக்கனி - அஜித் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் தற்போது மஞ்சு வாரியருடன் அஜித் நடிக்கும் காட்சிகள் இறுதிக்கட்ட ஷுட்டிங்காக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஏகே 61 ஷுட்டிங் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.



அத்தோடு செப்டம்பர் முதல் வாரத்தில் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தான் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஷுட்டிங் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement