• May 09 2024

ட்விட்டர் கணக்கை திடீரென டெலீட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்: இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தனது டுவிட்டர் கணக்கை திடீரென டெலிட் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் வெற்றிமாறன்.இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அறிமுகப்படமே இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுக் கொடுத்தது.

இதனை அடுத்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கியிருந்தார்.தொடர்ந்து விசாரனை, வடசென்னை, அசுரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளது.

இவர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் படமாகவும் விருதுகளை குவிக்கும் படமாகவும் உருவாக்குபவர் வெற்றிமாறன்,

அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகின்றார்.எனினும்  இதனையடுத்து அவர் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எனினும் இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் திடீரென தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. விடுதலை, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் கவனச்சிதறலை தடுக்க அவர் தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement