• May 10 2024

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த அஜித்- வெளியாகிய ஸ்டைலிஷ் போட்டோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு படம் வெளியாகியிருந்தது.இதனை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து பட விழாக்கள், ஆடியோ லாஞ்ச், விருது விழாக்கள் என எதிலும் கலந்துகொள்ளாவிட்டாலும், இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

முன்பெல்லாம் அஜித்தின் புகைப்படங்கள் எப்போவாது வெளியாகும், ஆனால் சமீப காலமாக அவரின் புகைப்படங்கள் வெளியாகாத நாளே இல்லை என சொல்லும் அளவுக்கு தினசரி வெளிவந்த வண்ணம் உள்ளது.


அந்த வகையில் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகர் அஜித்தின் கேஷுவல் லுக் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகின்றன. டவுசர் மற்றும் டீ சர்ட் அணிந்தபடி ரோட்டோரம் நின்றபடி போஸ் கொடுத்துள்ள அஜித்தின் புகைப்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


மேலும் அந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்லிம்மாகவும் காட்சியளிக்கிறார். இதன்மூலம் அவர் விடாமுயற்சி படத்திற்காக வெளிநாட்டில் இருந்தபடியே வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.









Advertisement

Advertisement

Advertisement