• May 18 2024

சர்ச்சையில் சிக்கிய 'லியோ' படப்பாடல்... படக்குழு எடுத்த அதிரடி முடிவு...!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன 'நா ரெடி' பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது.


இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. அந்தவகையில் தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது போதைப்பொருள் பழக்கம், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பட ‘நான் ரெடி’ பாடல் உள்ளதாக கூறி அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன.


இந்நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தற்போது ஒரு முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பாடலில் இடம் பெறும் மது காட்சிகள் விஜய் வாயில் சிகரெட் இருக்கும் காட்சிகள் ஆகியவற்றை நீக்கி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுகின்றது.

Advertisement

Advertisement