• May 11 2024

மீண்டும் பைக் ட்ரிப் கிளம்பிய அஜித்... யாருடன் தெரியுமா... பைக் நம்பரை கண்டுபிடித்த ரசிகர்கள்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் தற்போது 'ஏ.கே 61' என்ற படம் உருவாக்கி வருகின்றது. இப்படத்தின் மூலம் 'வலிமை' படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் எச். வினோத்துடன் கை கோர்த்திருக்கின்றார் அஜித்.


இப்படத்தினுடைய பைக் ரேஸ் காட்சி ஒன்று சமீபத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்தவகையில் அஜித் முன்பிருந்தே படப்பிடிப்பிற்கு இடையில் அவ்வப்போது பைக் ரைடுகளை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் இப்படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விரைவில் எடுக்கப்பட உள்ளது. அத்தோடு இந்த வருடம் டிசம்பரில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு படம் வெளியாகும் எனப் பலரும் கூறி வருகின்றனர். 


இப்படத்தின் உடைய இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் தல அஜித் தற்போது தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து லடாக், லேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாது அவரின் பைக் நம்பரும் வெளியாகி இருக்கின்றது.


அதாவது BMW R 1200 வகை பைக்கில் இவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். மேலும் இவரின் பைக்கில் never ever give up என்ற வசனம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இவர் TN07CU2577 என்ற எண் கொண்ட பைக்கை ஓட்டி வந்திருக்கின்றார்.


பைக் ரேஸில் அஜித் அலாதி பிரியம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் இப்புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement