• May 18 2024

ரொமான்டிக் லுக் கொடுத்து ரசிகர்களை சுரண்டி இழுக்கும் நந்திதா.... அதுவும் காதல் பாடலுக்கா... ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நந்திதா. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகின்றார். இவர் 'நந்தா லவ்சு நந்தினி' என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார். 


அதேபோல் தமிழ் சினிமாவில் இவரது அறிமுகம் 'அட்டக்கத்தி' என்ற படத்தின் மூலமாகவே அமைந்திருந்தது. எனினும் இவர் பிரபலமானது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த 'எதிர்நீச்சல்' என்ற படத்தின் வாயிலாகவே தான். அதையடுத்து 'முண்டாசுப்பட்டி, ஈஸ்வரன், நளனும் நந்தினியும், புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

தமிழ் திரையுலகில் நடித்து தனது திறமையினால் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக பிரபலமான இவர், 2016-ஆம் ஆண்டு 'இக்கடிக்கி பொதுவு சின்னவட' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இப்படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதினை "பிலிம்பேர் விருது" குழு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.


படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நந்திதா, அதில் தனது புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களினை பதிவேற்றி வருவார். அந்த வரிசையில் சமீபத்திலும் தனது வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.


அதில் ஒரு காதல் பாடலுக்கு ரொமான்டிக் லுக் கொடுத்து ரசிகர்களை சுரண்டி இழுத்திருக்கின்றார். இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement