• May 10 2024

பைக் வேணாம் என்று சைக்கிளில் ட்ரிப் சென்ற அஜித்- அப்போ விடாமுயற்சி சூட்டிங் அவ்வளவு தானா?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நில்ல வரவேற்புக் கிடைத்திருந்தது.கடந்த ஜனவரியில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனை அடுத்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் டைட்டில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது.


விடாமுயற்சி படப்பிடிப்பு உடனடியாக தொடங்காததால், அஜித்  நேபாளம், பூடான், நார்வே என ஜாலி டூர் சென்றிருந்தார்.மேலும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அறிவித்தார். மேலும் விடாமுயற்சி லைகாவின் மிக முக்கியமான ப்ராஜக்ட் என்றும் அவர் கூறியிருந்தார்.

 இதனால், விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படியான சூழ் நிலையில் எப்போதும் பைக்கில் டூர் செல்லும் அஜித், இந்த முறை சைக்கிளில் கிளம்பிவிட்டார். ஒயிட் ஷர்ட், தலையில் ஹெல்மெட் அணிந்து அஜித் சைக்கிள் ஓட்டும் இந்த போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 


"பைக்கில் டூர் போனாலே மாதக் கணக்கில் ஊர் சுற்றுவார். இதுல இப்போ சைக்கிளில் ட்ரிப் சென்றால் இப்போதைக்கு விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்காது" என்பதாக ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement