• May 04 2024

கடற்கரையில் குட்டை உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஜித் பட நடிகை- இளம் நடிகைக்கு டஃப் கொடுப்போர் போல இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை கனிகா. இவர் இதனைத் தொடர்ந்து அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரபல்யமான இவர் ஆட்டோ கிராப், எதிரி போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இது தவிர ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் இவர் தான். இதே போல மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.


கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.அந்த வகையில்  நடிகை கனிகா குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவலம் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். கோவலம் அரபிக்கடலில் இருந்து புகைப்படங்கள் & வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கரிகாத்தி கடற்கரை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் கனிகா கூறியுள்ளார். இந்த கடற்கரை வீட்டில் தங்குவதற்கான வாடகை மட்டும் ஒரு நாளுக்கு 6,200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement