• May 18 2024

பிக்பாஸ்க்கு போட்டியாக களமிறங்கும் விஜய்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் 9ம் திகதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனே ஒளிபரப்பாகவுள்ளது.

அதன் படி வரும் ஞாயிறு மாலை பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது.போட்டியாளர்களாக 21 பேர் வரப்போகிறார்கள் என்றும் அதில் சிலர் பொதுமக்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிபி முத்து, ரோஷ்ணி ஹரிப்ரியன், சத்யா சீரியல் ஆயிஷா, ராஜா ராணி 2 சீரியல் நடிகை ஆயிஷா, ரக்ஷன், காமெடியன் அமுதவாணன், ரவீந்தர், மைனா நந்தினி, பாடகி ராஜலக்ஷ்மி, ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து உள்ளிட்ட பலரது பெயர்கள் தற்போது வெளியாகி இருக்கும் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருக்கிறது. இதற்கான ப்ரமோஷன்கள் இப்போது நடந்து வருகின்றன.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் போது சன் தொலைக்காட்சி பிகில் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சீசன் 5 தொடக்க நாளின் போது இதே பிகில் படத்தை சன் தொலைக்காட்சி வெளியிட்டது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி ஆர் பி குறைந்ததாக கூறப்பட்டது.


Advertisement

Advertisement