• Apr 15 2026

"அவரை இனி நடிக்க வேணாம்னு சொல்லுங்க..!" கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்...

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் "good bad ugly " திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பயங்கர வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார். 


அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளதுடன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று அதிகாலை படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. விடாமுயற்சி தோல்வி இருந்த தல ரசிகர்களுக்கு ஆதிக் ரவி உற்சாகத்தை கொடுத்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது சில அஜித் ரசிகர்கள் அவரது கெட்டப்பில் உடைகளை அணிந்து தியேட்டரிற்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் ஜிவி பிரகாஷின் இசையை புகழ்ந்துள்ளதுடன் அவர் இசையமைப்பு வேலைகளை மாத்திரமே இனி பாக்கட்டும் படம் நடிக்க வேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் படத்தின் ரன் டைம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தாங்கள் ஏமாந்து போயுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement