• May 10 2024

ஐஷு வலையில் விழுந்த நிக்சன்... காதல் டபுள் கேம் விளையாடும் ஐஷு... நிக்சன்- ஐஷு bigg boss விட்டு வெளியேறுவது யார்... bigg boss news

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது சுவாரஷ்யமான ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் புதிதாக மலர்ந்த காதல் புறாக்கள் அட்டூழியங்கள் பற்றி பார்ப்போம் வாங்க  


பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத பாப்பா போல் இருந்த ஐஷு இப்போது பலரின் வெறுப்புக்கும் ஆளாகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் நேரத்திற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளும் இவருடைய குணம் தான். அதிலும் நிக்சனை வைத்து இவர் ஆடும் டபுள் கேம் இப்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.


ஆரம்பத்தில் அவரை தம்பி தம்பி என்று கூப்பிட்டு கொண்டிருந்த ஐஷு இப்போது ஓவர் நெருக்கம் காட்டுவதும், இரவு, பகல் பாராமல் பேசிக் கொண்டிருப்பதும்  ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அதிலும் சமீபத்தில் இருவரும் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டு முத்தமிடுவது போல் செய்த சேட்டையும் இணையத்தில் வைரலாக ட்ரோல் செய்யபட்டு வருகிறது. 


இந்நிலையில் பல இடங்களில் மைக்கை மாட்டாமல் இவர்கள் ரகசியம் பேசியதும் தண்டனைக்கு ஆளானது. இதையெல்லாம் பார்த்த கமல் கடந்த வாரம் நிக்சனை நன்றாக ரோஸ்ட் செய்தார். ஆனாலும் இவர்கள் திருந்திய பாடில்லை. இந்நிலையில் நிக்சனுடன் ஓவராக நெருக்கம் காட்டும் ஐஷுவுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலன் இருக்கும் விவரம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் அவர் இதற்கு முந்தைய சீசனில் பிக்பாஸையே அலறவிட்ட சைக்கோ நிரூப் தான் என்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒரு சேர அளித்துள்ளது.


பிக்பாஸ் அமீரின் நெருங்கிய நண்பனான இவரைத் தான் ஐஷு காதலித்து வருகிறார். இப்படி இருக்கும்போது தெரிந்தே நிக்சனின் உணர்வுகளில் அவர் விளையாடுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அது மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் இதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என ஐஷுவே ஒரு முறை வெளிப்படையாக பேசி இருந்தார். மேலும் தன் வீட்டிற்கு செல்ல கூட பயமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். 


இதைத்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இதன் மூலம் ஐஷு அதிகம் வெறுக்கப்படும் ஒரு போட்டியாளராக மாறி இருக்கிறார். இது இந்த வார நாமினேஷனில் நிச்சயம் தெரிய வரும். தற்போது ஓட்டிங் அடிப்படையில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement