• May 04 2024

லியோ படத்தின் வெற்றி விழாவில் ஏற்பட்ட புதிய சிக்கல்- பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் லியோ. கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகிய இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா என பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ. 148 கோடி வசூலித்து தாறுமாறு வேட்டை நடத்தியிருந்தது.தற்பொழுது  12 நாள் முடிவில் ரூ. 540 கோடி வரை வசூலித்துள்ளது என்கின்றனர்.படம் ஒருபக்கம் வசூலிக்க படக்குழு வரும் நவம்பர் 1ம் தேதி லியோ வெற்றிவிழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். 

இதற்கு காவல்துறையும் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி கொடுத்துள்ளனர்.இந்நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் டிக்கெட்டுடன் ஆதார் அட்டை எல்லாம் எடுத்து வர வேண்டும் என செய்திகள் வந்தன.


ஆனால் இப்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லையாம், விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement