• May 05 2024

நா ரெடி தான் பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம் போட்ட ஏஜெண்ட் டீனா- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான இப்படத்தில் இப்படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல்வேறு மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தாலும், படம் பார்க்க வந்த ஆடியன்ஸுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது ஏஜண்ட் டீனா கதாபாத்திரம் தான்.


கமலின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக வரும் இந்த கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருப்பார். இவரின் அந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்தன. இப்படத்தை பார்த்த பின்னர் யார் இந்த ஏஜண்ட் டீனா என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. 

இவரது இயற்பெயர் வசந்தி.இவர் ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லையாம், ஏற்கனவே 30 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்துள்ளார் இவர் பிரபல நடன இயக்குநரான தினேஷ் மாஸ்டரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் தற்பொழுது லியோ படத்தில் நடிபப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் லியோ படத்தில் இடம் பெறும் நா ரெடி தான் பாடலுக்கு ஏஜென்ட் டீனா சூப்பரா குத்தாட்டம் போட்டிருக்கம் வீடியோவைப் பகிர்ந்திருக்கின்றார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement