• May 18 2024

'மாமன்னன்' படத்தின் முழுக்கதை இதுதானாம்... இணையத்தில் கசிந்த தகவல் இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் உடைய கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இப்படத்தின் உடைய கதை என்னவெனில், ஊரிலேயே மதிக்கத்தக்க மனிதராக இருந்து வருகின்றார் வடிவேலு. இவரின் மகனான உதயநிதி தற்காப்பு கலை கற்றுத்தருபவராக இருக்கின்றார். 


இப்படியான ஒரு சூழலில் தன் தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அவரைவிட்டு பிரிந்து செல்கின்றார் உதயநிதி. இதையடுத்து வடிவேலுவுக்கு சில பிரச்சனைகள் கிளம்ப அந்த பிரச்னையை எதிர்த்து தன் தந்தையுடன் இணைந்து போராடுகிறார் உதயநிதி. இதுதான் படத்தின் உடைய மையக் கதையாக அமைந்திருப்பதாகவும், இதை மையமாக கொண்டு தான் முழுக்கதையும் அமைந்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.

Advertisement

Advertisement