• Sep 28 2024

சூர்யாவிற்கு பிறகு மீண்டும் தளபதியுடன் இணையும் நடிகை... வைரலாகும் அப்டேட் நியூஸ்...

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தளபதி 69 படத்தை பிரபல முன்னணி இயக்குனரான ஹெச். வினோத் இயக்குகிறார். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.


அக்டோபர் மாதம் முதல் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளிவந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் உலா வந்தது.


கடந்த சில நாட்களாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே முடித்துவிட்டாராம்.


சூர்யாவுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து விஜய்யுடன் தளபதி 69ல் பூஜா கைகோர்க்கிறார் என சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும். 

Advertisement

Advertisement