• Jan 19 2025

ஹேமா கமிட்டி அறிக்கை... எமக்கு எதுவும் தெரியாதென நழுவும் கோலிவுட் நடிகர்கள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் ஷூட்டிங் இல் நடித்து வருகின்றார். அவருடைய வேட்டையன்  திரைப்படம் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. வேட்டையன் படத்துடன் போட்டி போட இருந்த கங்குவா திரைப்படம் தற்போது விலகி உள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம்  ரஜினியை சந்தித்த செய்தியாளர்கள் கேரளாவில் நடைபெற்ற சம்பவம் பற்றியும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் கேள்வி எழுப்பிய போது, அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சூர்யா தொடர்பிலும் கால்பந்தாட்டம் தொடர்பிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன், கூலி படங்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய செய்தியாளர்களுக்கு, அனைத்திற்கும் பதில் கொடுத்த ரஜினிகாந்த் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி மட்டும் பேச மறுத்துள்ளார்.


தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கி வரும் நிலையில், இது தொடர்பில் ராதிகா, குஷ்பூ, அமலாபால், சமந்தா, ரஞ்சனி உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

ஆனாலும் கோலிவுட்டில் உள்ள நடிகர்கள் இந்த சம்பவம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜீவா, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சிகளில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இது தொடர்பில் பதிலளிக்க மறுத்துள்ளார்கள்.  இதனால் கோலிவுட்  நடிகர்கள் இந்த சம்பவம் தொடர்பில் நழுவுவதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement