• May 04 2024

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திவரும் டிடி ரிட்டன்ஸ்- இத்தனை கோடி கலெக்‌ஷனா

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது முழு நேர ஹீரோவாகி விட்டார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ். இது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். தில்லுக்கு துட்டு படங்களின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. 

அந்த இரண்டு படங்களையும் ராம்பாலா இயக்கி இருந்தார். தற்போது தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகமாக வெளியாகி இருக்கும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார்.


 இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். மேலும் பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, தீபா, மாறன், தங்கதுரை என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் மொத்தமாக ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.இது படக்குழுவினருக்கும் குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement