விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இந்த சீரியலில் தற்பொழுது ஷக்தி ப்ரீத்தியைக் காதலித்து வந்தார்.இருப்பினும் ஷக்தியை ப்ரீத்தி திருமணம் செய்ய மறுத்ததால் பொன்னி மாமாவின் பேச்சைக் கேட்டு ஷக்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் ஷக்தி பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.இருந்தாலும் ஷக்தியின் அப்பா பொன்னியையும் ஷக்தியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்.
மறுபுறம் பொன்னியை ஷக்தியிடம் இருந்து பிரித்தே தீருவேன் என வெண்ணிலாவும் அவரது அப்பாவும் புதுப்புது பிளான் போட்டு வருகின்றார்கள். ப்ரீத்தியின் அப்பாவின் சுயரூபமும் ஷக்திக்கு தெரிந்து விட்டது.
இப்படியான நிலையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் பச்சையம்மன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்க முத்தழகு சீரியல் முத்தழகு கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அடுத் வாரங்களில் புது டுவிஸ்ட் ஏதும் இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!