• May 05 2024

நடிகை கீர்த்தி சுரேஷை அப்படியே காப்பியடித்த நடிகை வரலக்ஷ்மி- ஆனால் இதுவும் நல்லாத் தான் இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் வரலக்ஷ்மி. சரத்குமார். இந்த படத்தில் லண்டனை சேர்ந்த நடன கலைஞராக நடித்து அசத்தியிருப்பார். இதனைத் தொடர்ந்து கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இது தவிர மலையாள மொழிப் படங்களிலும் ஆர்வம் காட்டி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான  தாரை தப்பட்டை படத்தில் சூறாவளி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலா இயக்கி இருந்த இந்த படத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.


தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திர மௌலி,சண்டைக் கோழி 2,சர்கார் மாரி 2, நீயா 2, கன்னி ராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இப்படங்கள் இவருக்கு பாராட்டுக்கள் பலவற்றையும் பெற்றுக் கொடுத்தது.

இது தவிர பொய்க்கால் குதிரை, காட்டேரி யசோதா மற்றும் பாம்பன், பிறந்தாள்  பராசக்தி, வண்ணங்கள் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பிரபல நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.  


தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த போதிலும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வரும் வரலட்சுமி சரத்குமார், ஆயுதபூஜை கொண்டாடிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை அப்படியே காப்பி அடித்துள்ளீர்களா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement