• Sep 08 2024

நிரூபித்தால் நிர்வாணமாக நடக்க தயார்.. தேர்தல் தோல்வி குறித்து பிரபல நடிகை ஆவேசம்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டிலுமே ஜெகன் மோகன் ரெட்டி கட்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஜெகன்மோகன் கட்சி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக நடக்க தயார் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியிருந்த நிலையில், தற்போது அவர் திடீரென பல்டி அடித்து ’நான் அப்படி கூறவே இல்லை, அவ்வாறு நான் கூறியதாக நிரூபித்தால் நிர்வாணமாக நடக்கிறேன்’ என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை சிலர் பயன்படுத்தினார்கள் என்று பிரபலங்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் குறிப்பாக பவன் கல்யாண் மீது அவர் குற்றம் சாட்டிய நிலையில் தமிழ் திரையுலகிலும் ஏஆர் முருகதாஸ் உட்பட சிலர் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.



இந்த நிலையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு ஆதரவாகவும் பவன் கல்யாண் கட்சிக்கு எதிராகவும் அவர் பேசிய நிலையில், ’ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் நான் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக நடக்க தயார்’ என்று கூறியதாக செய்திகள் வெளியானது.

அதேபோல் ஜெகன்மோகன் கட்சி தற்போது தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில் ’ஸ்ரீரெட்டி எப்போது கடற்கரையில் நிர்வாணமாக நடப்பார் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ’நான் அப்படி சொல்லவே இல்லை, அப்படி சொன்னதாக யாராவது நிரூபித்தால் நிர்வாணமாக நடக்க தயார்’ என்று கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement