• May 10 2024

நடிகை ரோஜா திருமணம் செய்யும் போது இப்படியா இருந்தார்..? வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

90 களில்  இளசுகளின் மனதை கொள்ளையடித்த நடிகர்களில் ஒருவர் தான்  நடிகை ரோஜா.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை  ரோஜா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.



மேலும் அவர் சினிமாவுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கி தற்போது எம்எலஏ-வ ஆந்திர அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார்.

பிரபல இயக்குநர் செல்வமணியை தான் ரோஜா காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள்.

அத்தோடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திருமணத்திற்கு வந்து அவர்களை வாழ்த்திவிட்டு ஒரு அறிவுரையை கூறினாராம்.

என் மகள் ரோஜா கண்களில் கண்ணீரே வரக்கூடாது, நன்றாக பார்த்துக்கொள் என செல்வமணியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா.

 இந்த விஷயத்தை பல வருடங்களுக்கு பிறகு அளித்த பேட்டியில் ரோஜா மற்றும் செல்வமணி தெரிவித்து இருக்கிறார்கள். 

அவர்களது திருமண புகைப்படம் இதோ.. 




Advertisement

Advertisement

Advertisement