• May 04 2024

சொந்த ஊரில் முதல் முறையாக விருது பெற்ற நடிகை ரேவதி- அட இவர் இந்த ஊரைச் சேர்ந்தவரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ரேவதி. இவர் தமிழில் ரஜினி ,கமல் ,மோகன் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு அந்த காலத்தின் இளம் ரசிகர்களின் கனவு நாயகியாகவும் வலம் வந்தவர்.

இதன் பின்பு இப்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் பூதகாலம் என்கிற படத்தில் கணவன் இல்லாமல் ஒற்றை ஆளாக தனது மகனை வளர்க்கும் தாயாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

இதனால் இவருக்கு 52வது கேரளா அரசு விருதுகளினால் ரேவதிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரேவதி பெறும் முதல் கேரள அரசு விருது இதுதான். கடந்த 1983-ல் மலையாளத்தில் கட்டத்தே கூடு என்கிற படத்தில் அறிமுகமான அதே சமயத்தில்தான் தமிழில் மண்வாசனை என்கிற படத்திலும் அறிமுகமானார்.

இத்தனை வருட திரையுலக பயணத்தில் மூன்று தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ள ரேவதிக்கு தனது சிறந்த நடிப்பிற்காக முதல்முறையாக தனது சொந்த ஊரான கேரளாவில், கேரள அரசு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஏதோ ஒருவகையில் தேர்வு குழுவினர் அனைவரின் கவனத்தையும் எனது நடிப்பு கவர்ந்திழுத்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இந்த படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement