• May 02 2024

மீண்டும் நானிக்கு ஜோடியாகும் நடிகை பிரியங்கா மோகன்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். 


இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நானீக்கு ஜோடியாக  இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ், பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 

https://twitter.com/DVVMovies/status/1715676821596029170?t=g3xXOwZFAazE75h1irFchw&s=19

Advertisement

Advertisement

Advertisement