• May 04 2024

அழகிய குழந்தையைப் பெற்றெடுத்த நடிகை பூர்ணா- மகிழ்ச்சிப் பெருக்கில் அவரது கணவர்-என்ன குழந்தை தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள நடிகையான பூர்ணா கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு. இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூர்ணா. 

இதையடுத்து தகராறு, கந்தக்கோட்டை போன்ற படங்களில் நாயகியாக நடித்த இவருக்கு தமிழில் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை.இதனால் அடங்கமறு, காப்பான், தலைவி என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 


இதுதவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்திய நடிகை பூர்ணாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இதையடுத்து கர்ப்பமான நடிகை பூர்ணாவுக்கு கடந்த மாதம் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு குழந்தை பிறந்த போது ஹாஸ்பிட்டலில் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement