• May 04 2024

நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்... மாப்பிள்ளை இந்த நடிகர் தானாம்... குவியும் வாழ்த்துக்கள்...!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகைகளில் ஒருவர் தான் லட்சுமி மேனன். கும்கி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனனுக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையாக மாறினார்.


இதனையடுத்து இரண்டாவது படம் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் லட்சுமி மேனன் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

பின்னர் 'குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன்' என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். மேலும் 'றெக்க' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது இவர்  'சிப்பாய்' என்ற படத்திலும், 'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து வருகிறார். 


இந்நிலையில் 27 வயதாகும் நடிகை லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை பிரபல நடிகர் என்று கூறப்படுகின்றது. 


முன்பதாக நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இவ்வாறு கிசுகிசுக்கப்பட்ட விஷாலைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.'


எது எவ்வாறாயினும் ரசிகர்கள் இப்போதிருந்தே லட்சுமி மேனனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். 

Advertisement

Advertisement

Advertisement