தமிழ் சினிமாவில் ஆர்யா, விஷால் நடித்த 'அவன் இவன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜனனி ஐயர். ஆரம்பத்தில் பல விளம்பரங்களில் நடித்த அவர், அதற்குப் பிறகு கிடைத்த சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
இவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது 'அவன் இவன்' படம்தான். அதற்குப் பிறகு தெகிடி, ஏழாம் நாள், அதே கண்கள், தர்ம பிரபு, முப்பரிமாணம் போன்ற பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மேலும் மக்களிடம் பிரபலமானார். அந்த சீசனில் அவரது இயல்பான தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் நடிகை ஜனனி தனது காதலரான சாய் ரோஷன் ஷியாம் என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் ஒரு விமானி என கூறப்படுகிறது. அவர்களுக்கு தற்போது சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஜனனியின் நிச்சயதார்த்தம் ஏற்கனவே எளிமையான முறையில் நடந்தது. அதைப்போலவே திருமணமும் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட தனிப்பட்ட நிகழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. தற்போது அவரது திருமண கொண்டாட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!