• Apr 26 2024

பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென நுழைந்த நடிகை அஞ்சலி- வைல்ட் காட் என்ட்ரி யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் இந்த வார இறுதியில் டபுள் எவிக்‌ஷன் நடக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால், போட்டியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அசீம், ஜனனி, ஏடிகே, ராம், ஆயிஷா, கதிரவன் ஆகிய ஆறு போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து ஏடிகே மற்றும் ராம் ஆகியோரே எலிமினேஷ் ஆகி வெளியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது.


இது தவிர 50 நாட்களைக் கடந்து விட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வைல்ட் காட் என்ட்ரியாக போகப்போவது என அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் படங்களை ப்ரமோஷன் பணிகளும் நடைபெறும்.


 இந்நிலையில், தற்போது நடிகை அஞ்சலி, தான் நடித்துள்ள ஃபால் (Fall) எனும் வெப் தொடரை ப்ரமோட் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 9-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால், இன்று அல்லது நாளைக்குள் அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement