• Feb 03 2023

மாப்பிள்ளைக்கு தீபா சொன்ன ஷாக்கிங்கான பதில்- கார்த்திக் மனைவி குறித்து கனவு காணும் அபிராமி- கார்த்திகை தீபம் எப்பிஷோட்

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

ஷுதமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 தீபாவை பெண் பார்க்க வந்தவர்கள் அவள் கருப்பு என்ற காரணத்திற்காக வேண்டாம் என்று சொல்லிவிட்டு போக தீபா பீல் பண்ணுகிறாள்.அடுத்து கார்த்திக் வீட்டில் மீனாட்சி கார்த்திக்கு பொக்கே வாங்க வேண்டும் என்று வேலைக்காரி திலகா கிட்ட சொல்ல உடனே அதை கவனித்த ஐஸ்வர்யா கார்த்திக்கு எதுக்கு பொக்கே அந்த மாதிரி எதுவும் கிப்ட் எல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறாள். 

அத்தை அபிராமிக்கு தெரிந்தா சத்தம் போடுவாங்க, வேண்டுவே வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்.அடுத்து தீபாவின் வீட்டில் அம்மா முருகரிடம் என்னுடைய பொண்ணுக்கு ஏன் இந்த மாதிரி ஆகுது தயவு செய்து அவ மனசை பார்க்க சொல்லுங்க என்று பீல் பண்ணி வேண்ட தீபா ஆறுதல் கூறுகிறாள். 


பின்னர் இந்த பக்கம் கார்த்திக் வீட்டுக்கு வர அனைவரும் ஆரத்தி எடுத்து அழைத்துச் செல்வது அப்போது ஐஸ்வர்யா பொக்கே கொண்டு வந்து கார்த்திகை விஷ் பண்ண மீனாட்சி கடுப்பாகிறாள்.அப்போது கார்த்திக் கோயிலில் ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் அந்த பொண்ணு நம் அம்மா அப்பா அறுபதாம் கல்யாணத்துக்கு பாட சொல்லலாம் என்று சொல்ல ஐஸ்வர்யாவும் ஓகே சொல்ல அபிராமி அம்மா ஓகே சொல்கிறார்.

அன்று இரவு அபிராமி தன் கணவரிடம் தன் மகனைப் பற்றி பெருமையாக சொல்கிறாள். அழகாகவும் திறமையாகவும் படித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று அபிராமி அருணாச்சலம் தெரிவிக்கிறாள்.அடுத்து தீபா வீட்டில் கருப்பு என்ற காரணத்திற்காக வேணாம்னு சொன்ன மாப்பிள்ளை வந்து என் அப்பா அம்மாவுக்காக தான் இந்த பெண்ணை பிடிக்கவில்லை தீபாவினை பிடித்திருக்கிறது நான் தீபாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல தீபா வேண்டாம் என்று சொல்லி உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க அவங்க அழகான பொண்ண பார்க்குறது உங்க சந்தோஷத்துக்காக தான் தயவுசெய்து நீங்க ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணீங்க என்று சொல்கிறாள்.

அடுத்து தீபாவின் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பது அடுத்த எப்பிஷோட்டுகளில் தான் தெரியும்.

Advertisement

Advertisement

Advertisement