• Jan 22 2025

தளபதி விஜய்க்கு பதிலாக நடிகர் விஷாலா..? எதற்கு தெரியுமா..?

Mathumitha / 10 hours ago

Advertisement

Listen News!

தற்போது வெளியாகியுள்ள மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து விஷாலிற்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.உடல் நிலை மோசமான நிலையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அனைவரையும் கலங்கடித்த இவர் தற்போது குணமடைந்திருப்பதாக கூறியிருந்தார்.


இந்நிலையில் பல இயக்குநர்களுடன் அடுத்தடுத்து படம் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடிக்க தீர்மானித்திருந்த "யோகன் அத்தியாயம் ஒன்று " படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இப் படத்தில் துப்பாக்கி காட்சிகள் அதிகம் இருப்பதனாலும் படம் அதிகம் திரில்லர் ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கிடையில் அஜய் ஜானமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் இப் படத்தின் படப்புடிப்புகள் அடுத்த வருடம் ஆரம்பிக்க பிளான் பண்ணி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement