• May 04 2024

நடிகர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து செய்தி... குஷியில் சந்திரமுகி 2 படக்குழு...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி முதலாம் பாகம்  திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் செப்டெம்பர் 28-ஆம் திகதி வெளியானது. சித்திரை படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் புதிய கோணத்தில் சந்திரமுகி 2 திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடிகர் ராகவா லாரன்ஸ்வுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அந்தவகையில் இப்படம் கடந்த 28-ம் திகதி திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. படம் வெளியான நேரம் தொட்டு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருப்பதோடு பாசிட்டிவ் விமர்சனங்களும் அதிகம் கிடைத்து வருகின்றன. 


சந்திரமுகி 1 பாகத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ,சந்திரமுகி 2 பாகம் திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு இவ்விதம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். "மிக பெரிய வெற்றி படமாக்கிய சந்திரமுகி திரைப்படத்தை வேறு ஒரு கோணத்தில் நல்ல பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் பி.வாசு அவர்களுக்கும்,அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் , மற்றும் படக்குழுவினருக்கும் என்னுடை வாழ்த்துக்கள் ' என்று  கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement