• Apr 28 2024

சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?- செம குஷியில் படக்குழு

stella / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கிய இந்தப் படம் 2005ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2,செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

சந்திரமுகி 2-வையும் பி வாசுவே இயக்க, ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.அவருடன் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2-வில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி 2 அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது. 


ஆனால், படம் பார்த்த ரசிகர்களோ பெரும் கதறல்களுடன் தியேட்டரை விட்டு வெளியேறுகின்றனர். பி வாசு சந்திரமுகி 2ம் பாகம் எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ், கங்கன ரனவாத் நடிப்பு, வடிவேலுவின் காமெடி, ஹாரர் என படத்தில் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.


முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தும் சந்திரமுகி 2 படம் 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement