• May 09 2024

பாண்டிச்சேரி கடற்கரையில் ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன்- வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி இல் தொகுப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.ஆக்ஷனும் காதலும் சேர்ந்து நடிப்பில் கலகட்டும் நம்ம சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளிவந்த திரைப்படம்தான் டான்.

இப்படம் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியாகியது. நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்ற படமாக அனைவராலும் பேசப்படுகிறது.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் SK20 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை ஜதி ரத்னலு பட இயக்குநர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தினை அருண் விஷ்வாவின் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகின்றார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். இவருக்கு வில்லனாக நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்கவுள்ளார். இத் தகவலை இப்படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆரம்பமாகி தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகின்றது.இது தொடர்பான BTS புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இப்படப்பிடிப்பில் நடிகை மரியாவும் கலந்து கொண்டுள்ளனர் படப்பிடிப்பில் ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது,இப்படங்கள் சமுகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement