• May 19 2024

மாநாடு பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கவுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்- வெளியாகிய லேட்டஸ்ட் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகிய மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற ஹிட் திரைப்படங்கள் இவரை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்தோடு இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் டான். இத்திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20வது படமான பிரின்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை தொடர்ந்து சென்னை-28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement