• May 19 2024

மீண்டும் ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நடிகை நயன்தாரா-அப்போ இந்தப் படமும் வெற லெவலில் இருக்கும்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ஜெயம்ரவி. "ஜெயம்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வந்த நடிகர் ஜெயம் ரவியின் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று "தனி ஒருவன்".

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இயக்குநர் அகமது இயக்கத்தில் மீண்டும் ஜெயம்ரவி நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இப்படத்திற்கு இதுவரைக்கும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் தற்போது "இறைவன்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அத்தோடு இந்த திரைப்படத்தை முன்னணித் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதாகவும் அதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இப்புதிய படத்தின் தலைப்பைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் "தனி ஒருவன்" படம் போலவே இப்படமும் பயங்கர ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement