• May 04 2024

பிரேக் செய்த நடிகர் சதீஸ்... மயங்கி விழுந்த விடீவி கணேஷ்... நினைத்து ஒன்று நடந்தது ஒன்னு...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் சதீஸ் நடிக்கும் கன்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் கற்பனையின் விசித்திரக் கதையாகும், இது அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியது. இப்படத்தில் சதீஷ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன் மற்றும் சில வெளிநாட்டு நடிகர்களும் நடித்துள்ளனர். 


கன்ஜூரிங் கண்ணப்பன் என்ற திகில் நகைச்சுவைத் திரைப்படம். டிசம்பர் 2023 அல்லது 2024 தொடக்கத்தில்  திரையரங்குகளில் வெளியாகும் என திரைபடக்குழு அறிவித்திருந்தது இந்நிலையில் அந்த திரைப்படத்துக்கான டப்பிங் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திரைப்பட நடிகர் சதீஷ் டப்பிங் நடக்கும் இடத்திற்க்கு சென்று நடிகர் விடீவி கணேஷ் அவர்களை பார்த்து கதைக்கிறார். 


அவரும் படம் தொடர்பாக அவரும் சில விடையங்களை சொல்ல பிறகு சதீஸ் அவரிடம் உங்களுக்கு பேய் பயம் இருக்கா என்று கேட்ட விடீவி கணேஷ் அவர்களும் சிரித்துக்கொண்டே " கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் எரியும் பிணத்துக்கு அருகில் மங்காத்தா ஆடுனவண்டா நான் "  என்று சொல்லி பெருமை பேச பேய் வேடம் போட்ட ஒருவர் திடீர் என்று குதிக்க  கணேஷ் மயங்கி விழுந்து விடுகிறார்.


சதீஷ் மற்றும் படக்குழு உறுப்பினர்கள் பயந்து தட்டி எழுப்புகின்றனர். எல்லோரும் பதறும்  தருணத்தில் நடிகர்  கணேஷ் எழும்பி " எப்படி இருந்தது நம்ப பிரேக் எனக்கே பிரேக் காட்டுறிங்களா, பேய் கூட பாய் போட்டு படுத்தவன்டா நான்" என்று சொல்லி சிரிக்கிறார். இந்த காமெடி விடியோவை நடிகர் சதீஸ் தனது இன்ஸராக்கிரமில் பதிவிட்டுள்ளார்.  


Advertisement

Advertisement

Advertisement