• Apr 19 2026

ஆர்.எம். வீரப்பனின் புதல்வர் தமிழழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

முன்னாள் அமைச்சரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர் தமிழழகனின் திடீர் மறைவால் திரை உலகம் மற்றும் அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

அத்துடன் இந்த செய்தியால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டு, தமிழழகனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


ரஜினிகாந்த் பதிவில், “மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வார்த்தைகள் ரஜினிகாந்தின் தன்னிச்சையான மன உணர்வையும், தமிழழகனுடன் அவருக்கு இருந்த நெருங்கிய உறவையும் வெளிப்படுத்துகின்றன.

Advertisement

Advertisement