• May 04 2024

வேட்டி சட்டையில் பிரகாசிக்கும் நடிகர் நானி- அடடே இப்படி ஒரு விஷேசம் அவங்க வீட்டில நடந்திச்சா- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்  நானி . இவர் தமிழில் நான்ஈ திரைப்படத்தின் மூலம் பிரபல்யமானவர். தொடர்ந்த தமிழில் சரியான படவாய்ப்புக்கள் அமையாததால் தெலுங்கு சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.


அந்த வகையில் இறுதியாக நஸ்ரியா நசீம் உடன் இணைந்து அடடே சுந்தரம் என்னும் காதல் படத்தில் நடித்திருந்தார்.இவர் இதுவரை இரண்டு மாநில நந்தி விருதுகள், ஒரு பிலிம்பேர் விமர்சகர்களின் சிறந்த நடிகருக்கான விருது மற்றும் 2013 ஆம் ஆண்டு டொராண்டோ ஆஃப்டர் டார்க் திரைப்பட விழாவில் சிறந்த ஹீரோ விருது மற்றும் இரண்டு பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.


இவர் நடிப்பில் வெளியாகிய ‘ அஷ்ட சம்மா , ரைடு, பீமிலி கபடி ஜட்டு , ஆலா மொடலைண்டி , பில்லா ஜமீன்தார் , ஈகா , எட்டோ வெள்ளி போயிந்தி மனசு ‘, ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நானி அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில் நேற்றைய தினம் சத்தியநாராயண பூஜையை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார்.


உறவினர் மற்றும் பெற்றோருடன் இந்த விரதத்தை மேற்கொண்ட நானி அது தொடர்பான புகைப்படங்களை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்குத் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருவதனைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement