• May 18 2024

ஆர்யா நடிப்பில் அதிரடி ஆக்ஷனாக உருவாகியுள்ள கேப்டன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ஆர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன். இப்படத்தை  சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளதோடு ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும்  டி இமான் இசையில் உருவாகியுள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில்  சற்று முன் இப்படத்தின் ட்ரெய்லர்  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் ஆக்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுவா ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement