• Nov 05 2025

லே-லடாக்கில் சிக்கி தவிக்கும் நடிகர் மாதவன்....!வைரலாகும் இன்ஸ்டாவில் பதிவு...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர. மாதவன் தற்போது ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் கடும் மழையால் சிக்கி தவித்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதற்கான தகவலையும், தனது நிலையைப் பற்றிய அப்டேட்டையும் பகிர்ந்துள்ளார்.


"2008ல் ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்புக்காக லே-லடாக்கிற்கு வந்திருந்தோம். அப்போது பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டோம். இப்போது மீண்டும் அதேபோல் 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் மழையில் சிக்கி இருக்கிறோம். ஆனால் விரைவில் வானம் தெளிவாகும், வீடு வந்து சேருவேன் என்று நம்புகிறேன்," என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.


இதன் மூலம், தற்போது ஏற்பட்டுள்ள நிலைபற்றி அவர் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பது தெரிகிறது. லே பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலத்தடி வீழ்ச்சிகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாதவன் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வானிலை சூழ்நிலைகள் மேம்பட்டவுடன் அவர் மும்பை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவனின் இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு பாதுகாப்பான பயணம் அமைய பிரார்த்தனைகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement